உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்? வைகோ விளக்கம்

திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ விளக்கமளித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ விளக்கமளித்துள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதற்கான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது.

இதன்பிறகு, செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து வைகோ கூறியது:

"திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 6 தொகுதிகளிலும் தனித் தனி சின்னத்தில் போட்டியிடுவதற்கான நடைமுறை சாத்தியம் இருப்பதால் அதை உணர்ந்து இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சனாதன ஹிந்துத்வ சக்திகளைத் தடுத்து நிறுத்துவதற்காக திமுகவுக்கு முழு ஆதரவைத் தருவோம். கருணாநிதி உடல்நிலை குன்றி இருந்தபோது, உங்களுக்கு எப்படி பக்கபலமாக இருந்தேனோ அதேபோல் ஸ்டாலினுடனும் துணை நிற்பேன் என அவரிடம் உறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.

சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக திமுகவோடு கைகோர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மிகச் சிறந்த தலைசிறந்த முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினைப் பார்க்கிறோம்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com