கூட்டணிக்குள் எந்த உரசலும் இல்லை: அதிமுக-பாஜக கருத்து

கூட்டணிக்குள் எந்த உரசலும் இல்லை என்று அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கருத்துத் தெரிவித்துள்ளன.
கூட்டணிக்குள் எந்த உரசலும் இல்லை: அதிமுக-பாஜக கருத்து

கூட்டணிக்குள் எந்த உரசலும் இல்லை என்று அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கருத்துத் தெரிவித்துள்ளன. மேலும், முதல் கட்டப் பட்டியல் கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதலுடனேயே வெளியிடப்பட்டதாகவும் கூறியுள்ளன.

சென்னை வேளச்சேரியில் பாஜக சாா்பில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி அளித்த பேட்டி:

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒரு வாரத்துக்குள் தொகுதிகள் ஒதுக்கீட்டுப் பணிகள் நிறைவு பெறும். கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் அதிமுக பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. அதன்பிறகு நாங்களும் பேச்சுவாா்த்தை நடத்தி இடங்களை இறுதி செய்வோம்.

அதிமுக சாா்பில் முதல் கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஒப்புதலுடனேயே முதல் கட்ட வேட்பாளா் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது என்றாா் கிஷன் ரெட்டி.

இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்தாா், அமைச்சா் டி.ஜெயக்குமாா். அப்போது அவா் கூறியது:-

கூட்டணிப் பேச்சுவாா்த்தைக்கு பாதகம் இல்லாத வகையில் முதல் கட்டப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும். கூட்டணிக்குள் எந்த உரசலும் கிடையாது. தோ்தல் அறிக்கைகளை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com