மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி

சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 154 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் (கோப்புப்படம்)
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் (கோப்புப்படம்)

சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 154 இடங்களில் போட்டியிடவுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியிலுள்ள இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 40 தொகுதிகளும், சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சென்னை வடபழனியில் இன்று (மார்ச் 8) இரவு நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த தொகுதிப் பங்கீடு உடன்பாட்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் கையெழுத்திட்டார்.

பின்னர் மூவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, மாற்றத்திற்கான அணி தமிழகத்தில் உருவாகியுள்ளது என்று கூறினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக  அக்கட்சியின் பொதுச்செயலாளர்  சி.கே.குமரவேல் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com