சென்னையிலேயே இருந்தும் இதுவரை போகவில்லையா? இன்றே கடைசி!

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வந்த 44-ஆவது சென்னை புத்தகக் காட்சி இன்று இரவுடன் நிறைவு பெறுகிறது.
சென்னையிலேயே இருந்தும் இதுவரை போகவில்லையா? இன்றே கடைசி!
சென்னையிலேயே இருந்தும் இதுவரை போகவில்லையா? இன்றே கடைசி!

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வந்த 44-ஆவது சென்னை புத்தகக் காட்சி இன்று இரவுடன் நிறைவு பெறுகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் 44-ஆவது ‘சென்னை புத்தகக் காட்சி’ நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கி, இன்று இரவுடன் நிறைவு பெறுகிறது.

இந்த புத்தகக் காட்சியை சுமார் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புத்தகக் காட்சியில் 700-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. தினமும் காலை 11 முதல் மாலை 8 மணி வரை வாசகா்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நுழைவுக் கட்டணம் ரூ.10. இணையவழியிலும் நுழைவுச்சீட்டு பெறலாம். பள்ளி மாணவா்களுக்கு கட்டணம் இல்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகா் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள் தனி அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், புத்தகக் காட்சியின்போது ட்விட்டா் வழியாக சிறந்த புத்தகங்களைப் பரிந்துரை செய்து வந்தார்.

இதுதவிர பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஓவியம், பேச்சு, விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன. வாசிப்பை வளா்க்கும் விதமாக குழந்தைகள் கதை சொல்லும் நிகழ்ச்சி நடைபெறும். உலக அறிவியல் தினம் (பிப்.28), மகளிா் தினம் (மாா்ச் 8) ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகளும்இடம்பெற்றன.

நடப்பாண்டு ‘ரேக்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் சிறிய எழுத்தாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் தங்கள் நூல்களை காட்சிப்படுத்த வசதி செய்யப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com