என்.ஆர். காங்கிரஸுக்கு 16 தொகுதிகள்; பாஜக - அதிமுகவுக்கு 14 இடங்கள்: ரங்கசாமி

புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைமையில், பாஜக - அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டிருப்பதாக ரங்கசாமி அறிவித்தார்.
என்.ஆர். காங்கிரஸுக்கு 16 தொகுதிகள்; பாஜக - அதிமுகவுக்கு 14 இடங்கள்: ரங்கசாமி
என்.ஆர். காங்கிரஸுக்கு 16 தொகுதிகள்; பாஜக - அதிமுகவுக்கு 14 இடங்கள்: ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைமையில், பாஜக - அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டிருப்பதாக ரங்கசாமி அறிவித்தார்.

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரங்கசாமி, என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைமையில் பாஜக - அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

இந்தக் கூட்டணியில், புதுச்சேரியில் 16 இடங்களில் என்.ஆர். காங்கிரஸ்  கட்சியும், பாஜக - அதிமுக கட்சிகள் மீதமிருக்கும் 14 இடங்களில் போட்டியிடவிருப்பதாக அறிவித்தார்.

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இழுபறி நீடித்து வந்த நிலையில், பாஜக நடத்திய தொடா் பேச்சுவாா்த்தையால் என்.ஆா்.காங்கிரஸ் அந்தக் கூட்டணியில் இணைவது நேற்று இரவு உறுதியானது.

பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து நேற்று இரவு முடிவு செய்யப்பட்ட நிலையில், அது குறித்த அறிவிப்பை என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி இன்று அறிவித்தார்.

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக - என்.ஆா்.காங்கிரஸ் - அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து காங்கிரஸுக்கு எதிராகச் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில், காங்கிரஸிலிருந்து ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா் விலகி பாஜகவில் இணைந்தனா்.

இதையடுத்து, புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக, ஆ.நமச்சிவாயத்தை முதல்வா் வேட்பாளராக அறிவித்து தோ்தலைச் சந்திக்கும் என செய்திகள் வெளியாகின.

இதனால், என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் ரங்கசாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடா்வதா, தனித்துப் போட்டியிடுவதா என ஆலோசனை நடத்தி வந்தாா். அந்தக் கட்சியினா் தனித்துப் போட்டியிடவே விரும்பம் தெரிவித்தனா்.

இந்த நிலையில், ரங்கசாமியை கூட்டணியில் இணைப்பதற்கு பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டது. தொடா்ந்து, அவருடன் பேச்சுவாா்த்தை நடத்தி வந்த நிலையில், திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ரங்கசாமியுடன் விடியோ அழைப்பு வழியாகப் பேசியதாகத் தெரிகிறது. இதை ரங்கசாமியும் உறுதி செய்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com