
வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கிய ஏலக்காய் மூட்டைகள்
நாகை மாவட்டம், வேதாரண்யம், மணியன்தீவு கடற்கரையில் மேலும் மூன்று ஏலக்காய் மூட்டைகள் இன்று கரை ஒதுங்கியது.
இலங்கைக்கு கடத்தும் போது கடலில் விழுந்து வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கிய 100 கிலோ ஏலக்காய் மூட்டைகளைக் கடலோரக் காவல் நிலைய போலீஸார் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மேலும் 120 கிலோ எடையுள்ள 3 மூட்டைகள் கரை ஒதுங்கியுள்ளது.