விழுப்புரம் அருகே துணிகளை ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து

ஈரோட்டிலிருந்து சுமார் 10 டன் எடையுள்ள துணிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கொல்கத்தாவுக்கு புதன்கிழமை காலை புறப்பட்டது.
விழுப்புரம் அருகே துணிகளை ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து
விழுப்புரம் அருகே துணிகளை ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து

ஈரோட்டிலிருந்து சுமார் 10 டன் எடையுள்ள துணிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கொல்கத்தாவுக்கு புதன்கிழமை காலை புறப்பட்டது. லாரியை திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த சுரேஷ்(37) என்பவர் ஓட்டி‌வந்துள்ளார். பகல் 11.30 மணி அளவில் விழுப்புரத்தை கடந்து லாரி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது வி.சாலை என்ற இடத்தில் சென்றபோது திடீரென லாரியின் டயர் வெடித்துள்ளது.

என்ன என்று பார்க்க லாரியை ஓட்டுநர் சாலையோரம் நிறுத்தியுள்ளார். அப்போது லாரியின் பின்பக்கத்திலிருந்து புகை கிளம்பியுள்ளது. சற்று நேரத்தில் லாரியில் இருந்த துணி‌ மூட்டைகள் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். 

உடனே விக்கிரவாண்டி தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயை கட்டுப்படுத்தி அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து 1 மணி‌ நேரமாக தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தீ விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ‌போலீஸார் அங்கு வந்து போக்குவரத்தை மாற்றி வாகனங்களை வேறுபாதையில் அனுப்பினர். தீ விபத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான துணிகள் சேதமடைந்துள்ளதாகத் தகவல் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com