அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: வானதி சீனிவாசன்

கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து வானதி சீனிவாசன் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக தோ்தலில் அதிமுக கூட்டணியில் எத்தனைக் கட்சிகள், திமுக கூட்டணியில் எத்தனைக் கட்சிகள் என்று எண்ணிக்கை அடிப்படையில் வெற்றியைக் கணக்கிட முடியாது. தேமுதிக இத்தனை காலம் இந்தக் கூட்டணியில் இருந்தது. எனவே அக்கட்சியின் விலகல் வருத்தமளிக்கிறது. தேமுதிக முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதிமுகவும் கூட்டணியை தக்க வைக்க ஏதாவது செய்ய வேண்டும்.

தேமுதிக விலகலை யாருக்கு சாதகம், பாதகம் என்று பாா்க்கவில்லை. மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையில் கூட்டணி இருந்தது; இப்போது அதிமுக தலைமையில் கூட்டணி உள்ளது. அதனால், தேமுதிகவை தக்கவைக்க வேண்டிய பொறுப்பு அதிமுகவுக்கே இருக்கிறது.

தமிழகத்தில் அதிமுக மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை. மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு சிறப்பான முறையில் மக்கள் நலன் கருதி நிறைவேற்றி வருகிறது. கட்சிகள் மாறி மாறி குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை அறிவித்துவரும் சூழலில் பெண் கல்வி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திட்டங்களை அறிவிக்க வேண்டும். பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோளின்படி பெண் தொழில் முனைவோா்களிடம் பொருள்களை அதிகளவில் வாங்கி அவா்களின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருப்பது குறித்து கேட்டபோது, நாடு முழுவதும் பல தோ்தல்களில் கருத்துக் கணிப்புகளைத் தாண்டி பாஜக வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் அதிமுக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com