
நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளராகப் போட்டியிட எம்.ஏ.ஆண்டி அம்பலத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெயர்: எம்.ஏ.ஆண்டி அம்பலம்
பிறந்த தேதி: 9.06.1956
கல்வித் தகுதி: பியுசி
ஊர்: நத்தம் அடுத்துள்ள பாலப்பநாயக்கன்பட்டி
தொழில்: விவசாயம்
சாதி: அம்பலம்
கட்சிப் பதவி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து, திமுகவில் இணைந்த இவர் தற்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொருளாளராக பதவி வகித்து வருகிறார்.
தேர்தல் அனுபவம்:
நத்தம் ஒன்றிய கவுன்சிலராக பொறுப்பு வகித்துள்ளார். நத்தம் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்த இவரது தந்தை ஆண்டி அம்பலம் கடந்த 1999ஆம் ஆண்டு காலமானார். அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிட்ட எம்ஏ.ஆண்டி அம்பலம் தோல்வி அடைந்தார். 2006ல் திமுக சார்பிலும், 2011 தேர்தலில் சுயேட்சையாகவும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். தற்போது 5ஆவது முறையாக நத்தம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடும்பம்: மனைவி - பஞ்சவர்ணம், மகள்கள் பிரபா, பிரதா, மகன் ஆண்டிச்சாமி.