
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை மு.க. ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.
இந்த வேட்பாளர் பட்டியலில் குறிப்பிடத்தக்க வேட்பாளர்களாக..
வேலூர் மாவட்டம் காட்பாடியில் 10-வது முறையாக துரைமுருகன் போட்டியிடுகிறார். 1971-ஆண்டு முதல் 12 முறை துரைமுருகன் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். 10 முறை காட்பாடி தொகுதியிலும் 2 முறை ராணிப்பேட்டை தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார். மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், கே.என். நேரு திருச்சி மேற்கு தொகுதியிலும், மா. சுப்ரமணியன் சைதாப்பேட்டையிலும் போட்டியிடுகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் 2021: தி.மு.கழக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு! https://t.co/X031mCQw13
— M.K.Stalin (@mkstalin) March 12, 2021
திமுக இளைஞரணி செயலாளரும் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஸ்டாலின் வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில்..
திமுக தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில், 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
முன்னதாக, திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இன்று காலை வெளியாகும் என்று தகவல்கள் வெளியானது. இறுதியாக இன்று மதியம் 12.00 மணிக்கு திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, வேட்பாளர் பட்டியலுடன் இன்று காலை திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப் படத்தின் முன் வைத்து கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்ற ஸ்டாலின், அங்கு வேட்பாளர் பட்டியலை வைத்து, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும் அண்ணா நினைவிடத்திலும் வேட்பாளர் பட்டியலை வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்பு நேராக கட்சி அலுவலகத்துக்கு வந்த மு.க. ஸ்டாலின், 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்..
மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கை நாளை (சனிக்கிழமை) வெளியாகவுள்ளது.