திருச்சி: காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறவும்,  விவசாய சங்கத்தைப் பற்றியும் தவறுதலாக செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி
திருச்சி காவிரி ஆற்றில் கழுத்தளவு மணலில் புதைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
திருச்சி காவிரி ஆற்றில் கழுத்தளவு மணலில் புதைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.


திருச்சி:    வேளாண் சட்டங்களை திரும்பப்பெறவும்,  விவசாய சங்கத்தைப் பற்றியும் தவறுதலாக செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி காவிரி ஆற்றில் கழுத்தளவு மணலில் புதைத்துக்கொண்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். 

108 நாள்களாக தில்லியில் போராடிய விவசாயிகளில் 200 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும் இயற்கையின் கொடுமையாலும் இறந்துள்ளனர். அவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவே மறுக்கிறது.  வேளாண் சட்டங்களை திரும்பப்பெறவும் மறுக்கிறது. அத்துடன் பஞ்சாபில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 30 விவசாயிகளை கைது செய்து ஜனநாயக நாட்டில் உள்ள உரிமையை சர்வாதிகாரிகள் ஹிட்லர் முசோலினி போல, தற்போது தடுத்து கைது செய்து கேரளம் காட்டில் கொண்டு விட்டுவிட்டார்கள்.

நாம் வாழ்வது சுதந்திர இந்தியாவிலா? அடிமை இந்தியாவிலா? என்பதற்காகவும் விவசாயிகளை மத்திய மாநில அரசுகள் ஏமாற்றி மூன்று வேளாண் சட்டங்கள் மூலம் மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு வந்து விட்டால் அதை சாப்பிட்ட இளைஞர்கள் ஆண்மை இழந்து விடுவார்கள், பெண்கள் கருத்தரிக்க மாட்டார்கள்.  

இந்த நிலையில் வருங்கால சமுதாயத்தை பாழடிக்காமல் இருக்க  வேண்டும் என்பதற்காக, விவசாயிகள் ஆகிய எங்களை ஆற்று மணலில் புதைத்து விடுங்கள் வருங்கால சமுதாயத்தை காப்பாற்றுங்கள் என்பதற்காக சனிக்கிழமை திருச்சி மாம்பல சாலை-அண்ணாசிலை செல்லும் காவிரி பாலத்தின் கீழ் காவிரி ஆற்றின் மணலில் புதைந்து விவசாயிகளைப் பற்றியும், எங்கள் விவசாய சங்கத்தைப் பற்றியும் தவறுதலாக செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவிரி ஆற்றில் கழுத்தளவு மணலில் புதைத்துக்கொண்டு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் எங்களை கொன்றுவிடுங்கள் என்பதை வலியுறுத்தி  சனிக்கிழமை பிற்பகல் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். 

உடன் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் மேகராஜன், பிரகாஷ், வாலையூர் பொன்னுசாமி, மாவட்ட செயலாளர் மரவனூர் செந்தில்குமார், மற்றும் நிர்வாகிகள் செல்லையா பிள்ளை,  பழனிச்சாமி, அப்பாவு, சிவக்குமார், சீனிவாசன், காத்தான், ராஜவேல் மற்றும் பல விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com