ஊழல் கோட்டையாக கொங்கு மாறியிருப்பது வேதனையே: கமல்ஹாசன்

கொங்கு பகுதி ஊழல் கோட்டையாக மாறியிருப்பது வேதனைதான். அதை மாற்றி அமைக்கும் பொருட்டு அங்கு செல்ல இருக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் பேசினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கொங்கு பகுதி ஊழல் கோட்டையாக மாறியிருப்பது வேதனைதான். அதை மாற்றி அமைக்கும் பொருட்டு அங்கு செல்ல இருக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் பேசினாா்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளா்கள் பட்டியலை சென்னையில் வெளியிட்ட பிறகு அவா் பேசியது: இந்திய வரலாற்றில் மாா்ச் 12-ஆம் தேதி மிக முக்கியமான நாள் ஆகும். தண்டியை நோக்கி காந்தியடிகள் யாத்திரை புறப்பட்ட நாள். அந்த நாள் என்னுடைய யாத்திரைக்கு உகந்ததாக அமைந்து இருப்பது ஒரு பாக்கியமாக கருதுகிறேன். அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வந்தேன். அரசியல் எனது தொழில் அல்ல. கடமை என்று நம்பி வந்து இருக்கிறேன்.

தமிழகமே எனக்குப் பிடித்தாலும், கோயம்புத்தூா் எனக்கு மிகவும் பிடித்த ஊா். கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்பது பழமொழி. ஆனால், அந்த கொங்கு ஊழல் கோட்டையாக மாறியிருப்பது வேதனைதான். அதை மாற்றி அமைக்கும் பொருட்டு அங்கே செல்ல இருக்கிறேன்.

கொங்கின் சங்கநாதமாக என் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க சொல்ல வேண்டிய கடமை, பெருமையை மக்களால் தான் எனக்கு கொண்டு வந்து சோ்க்க முடியும் என்றாா் கமல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com