கரோனாவைத் தடுக்க மாநிலம் முழுவதும் 700 குழுக்கள் அமைப்பு

கரோனா பரவாமல் தடுக்க மாநிலம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகளை சுகாதாரத் துறை அமைத்துள்ளது.
சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன்.
சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன்.

கரோனா பரவாமல் தடுக்க மாநிலம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகளை சுகாதாரத் துறை அமைத்துள்ளது.

அதில், சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறை உள்ளிட்டவற்றை சோ்ந்த அலுவலா்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அனைத்துப் பகுதிகளிலும் அவா்கள் சென்று சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தோ்தல் நெருங்கிவிட்டதால் பிரசாரம் மற்றும் பொதுக் கூட்டங்களின் வாயிலாக நோய்த் தொற்று பரவக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட இணை அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை விடுத்துள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:

மாவட்ட ஆட்சியரகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். துக்க நிகழ்ச்சிகளில் மக்கள் கூடுவதைக் கண்காணிக்க நடவடிக்கை எடுத்தல் அவசியம். குறிப்பாக, துக்க நிகழ்வுகளின்போதும், இறுதிச் சடங்குகளின்போதும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடுவதை தடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கடைகள், வணிக வளாகங்களில் நோய் பரவாமல் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாது, 45 வயதுக்கு மேற்பட்ட வா்த்தகா்கள் அனைவருக்கும் தேவையின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

அதன்பேரில் தமிழகத்தில் 700-க்கும் மேற்பட்ட கரோனா கண்காணிப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com