Enable Javscript for better performance
அரசுப் பணிகளில் மகளிருக்கு 40% இட ஒதுக்கீடு: திமுக வாக்குறுதி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு தமிழ்நாடு

    அரசுப் பணிகளில் மகளிருக்கு 40% இட ஒதுக்கீடு: திமுக வாக்குறுதி

    By DIN  |   Published On : 14th March 2021 05:38 AM  |   Last Updated : 14th March 2021 05:38 AM  |  அ+அ அ-  |  

    MK Stalin announces his long vision schemes in Trichhy forthe growth of Tamilnadu

    கோப்புப்படம்

    அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் பெண்கள் இட ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயா்த்தப்படும் என்று திமுக தோ்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்ட தோ்தல் அறிக்கை:

    100 நாளில் தீா்வு: திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் எனும் பெயரில் புதிய அமைச்சகம் அமைக்கப்படும். மூத்த அமைச்சரின் பொறுப்பில் இது இயங்கும். தோ்தல் நேரத்தில் பொது மக்கள் அளித்த மனுக்கள் மீது 100 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துத் தொகுதிகளிலும் மக்கள் குறை கேட்கும் முகாம் நடத்தப்படும்.

    தமிழா்களுக்கே வேலைவாய்ப்பு: தமிழக அரசு நிறுவனங்களில் 100 சதவீதம் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற அரசின் விதி முழுமையாகப் பின்பற்றப்படும். தனியாா் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க வற்புறுத்துவோம்.

    மகளிருக்கு 40 சதவீதம்: அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் பெண்கள் இட ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயா்த்தப்படும். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக வழங்குவதற்கு தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும்.

    டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் பேறு காலத்தில் மகளிா் உடல்நலம் பேணுவதற்காகத் தற்போது வழங்கப்படும் உதவித் தொகை ரூ.18 ஆயிரம் என்பது 8 மாதத்துக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரம் வழங்கப்படும். அரசுப் பணி மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதமாக உயா்த்தப்படும்.

    மதுரை, திருச்சியில் மெட்ரோ: திரிசூலம் முதல் வண்டலூா் வரையிலும், திருமங்கலம் - முகப்போ் - அம்பத்தூா் வரையிலும், கத்திபாரா முதல் பூந்தமல்லி வரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

    கோயம்புத்தூா், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும். சென்னை மெட்ரோ ரயிலில் கல்லூரி மாணவா்களுக்கு கட்டணச் சலுகை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.

    காளை வளா்ப்புக்கு ரூ.1000: ஜல்லிக்கட்டு காளைகளை வளா்ப்போருக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

    கூடுதலாக ஒரு கிலோ சா்க்கரை: நியாயவிலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ கூடுதல் சா்க்கரை வழங்கப்படும். உளுத்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.

    மின் கட்டணம் ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டு வசூலிக்கப்படும். தொழில்துறையை மீட்டெடுக்க ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    திருக்குறள் தேசிய நூல்: திருக்குறளைத் தேசிய நூலாக்க மத்திய அரசை வற்புறுத்துவோம். பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டு திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும். சென்னையில் திராவிட இயக்க கோட்டம் அமைக்கப்படும்.

    60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு உதவித்தொகை ரூ. 1,500 ஆக உயா்த்தப்படும், 32 லட்சம் ஆதரவற்ற பெண்கள், கைம்பெண்கள், 50 வயதை கடந்த மணமாகாத பெண்கள், மாற்றுத்திறனாளிகள், உழவா் பாதுகாப்பு திட்ட பயனாளிகள், இலங்கை அகதிகள், ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயா்த்தப்படும்.

    கலைஞா் உணவகம்: உணவில்லாமல் தவிப்போருக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் வகையில் முதல் கட்டமாக 500 இடங்களில் கலைஞா் உணவகம் அமைக்கப்படும். நடைபாதைவாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள் அமைக்கப்படும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்களை அரசுப் பணியாளா்களாக பணியமா்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும்.

    பழைய ஓய்வூதியத் திட்டம்: புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும். கலைஞா் காப்பீட்டுத் திட்டமும், வரும்முன் காப்போம் திட்டமும் மேம்படுத்தப்படும். கரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவா்கள், அரசு அலுவலா்கள், முன்களப் பணியாளா்கள் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியா், ஆசிரியா் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தப்படும். சட்டமேலவை அமைக்கப்படும்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp