
தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)
தமிழகத்தில் இதுவரை ரூ.99.68 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி, நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து வாகன சோதனை தீவிரம் அடைந்துள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் அதிகளவு பணம், ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
தோ்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்த கடந்த 26-ஆம் தேதி மாலை முதல் வாகன சோதனைகள் நடந்து வருகின்றன. இந்தச் சோதனைகளின் மூலமாக இதுவரை ரூ.99.68 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ரொக்கப் பணம் மட்டும் ரூ.51 கோடியே 39 லட்சமாகும்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.56 கோடியாகும். இத்துடன் ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்லப்படும் மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இதுவரையில் ரூ.51.99 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் ஆகியுள்ளனள்ளாா்.