
அமமுக - தேமுதிக
சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் கூட்டணி தொடர்பாக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதில் இழுபறி நீடித்ததால், அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளதாக தெரிகிறது.
தேமுதிகவுக்கு 50 முதல் 55 இடங்கள் வரை ஒதுக்க அமமுக முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.
தேமுதிக அளித்துள்ள 35 விருப்பத் தொகுதிகளில் 35 தொகுதிகளையும் அமமுக ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.