ஆரம்பாக்கம் மாதா கோவிலில் 109-ம் ஆண்டு தேர்த்திருவிழா 

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற வான தூதர்களின் அன்னை ஆலயம் என்கிற மாதா கோவிலின் 109 ஆம் ஆண்டு தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஆரம்பாக்கம் மாதா கோவிலில் 109-ம் ஆண்டு தேர்த்திருவிழா 

கும்மிடிப்பூண்டி:  கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற வான தூதர்களின் அன்னை ஆலயம் என்கிற மாதா கோவிலின் 109 ஆம் ஆண்டு தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற வான தூதர்களின் அன்னை ஆலயம் என்கிற மாதா கோவிலின் 109 ஆம் ஆண்டு தேர் திருவிழாவை  ஒட்டி கொடியேற்ற நிகழ்வு கடந்த மார்ச் 6 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நிகழ்விற்கு ஆரம்பாக்கம் மாதா கோவில் பாதிரியார் பாப்பையா தலைமை தாங்கினார். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பெரியபாளையம் மறைமாவட்ட முதன்மை குரு பாதிரியார் டி.அருள்ராஜ் பங்கேற்று கொடியேற்றத்தை துவக்கி வைத்து சிறப்பு பிரார்த்தனையை நடத்தினார்.

இதனை தொடர்ந்து 8 நாள்கள் வெள்ளிக்கிழமை வரை ஆரம்பாக்கம் மாதா கோவிலில் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதிரியார்கள் வருகை தந்து சிறப்பு பிரார்த்தனையை நடத்தினர்.

தொடர்ந்து வருகின்ற சனிக்கிழமை சாந்தோம் மேய்ப்பு பணி நிலைய இயக்குநர் பாதிரியார் ஜோஆண்ரூ தலைமையில் பாதிரியார் ராக் சின்னப்பா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்று தேர்திருவிழாவை ஒட்டி சிறப்பு பிரார்த்தனையை நடத்தினர். தொடர்ந்து 2 சிறிய தேர்கள் மற்றும் படகு வடிவில் அமைந்த தேரில் அலங்கரிக்கப்பட்ட மாதா திருவுருவ சிலையில் தேர்புறப்பாடு வழிபாடு நடைபெற்றதும், தேரானது மாத ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஆரம்பாக்கம் பகுதி முழுக்க சுமார் 3மணி நேரம் கன்னியஸ்திரிகள் மெழுகு திரி ஏந்தி செல்ல பக்தர்கள் பாடல்கள் பாட பேண்டு வாத்தியங்கள் வான வேடிக்கைகளோடு வீதி உலா கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழியெங்கும் பல்வேறு மத பக்தர்கள் மாதாவை வேண்டி வணங்கி மாதாவின் அருள் பெற்று சென்றனர். இந்த தேர் திருவிழாவில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

தொடர்ந்து  ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்க நிகழ்வு சிறப்பு வழிபாட்டுடன் நடைபெற்றது.

இந்த 10 நாள் தேர்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆரம்பாக்கம் மாதா கோவில் பாதிரியார் பாப்பையா தலைமையில் புனித அன்னாள் மட சகோதரிகள் மற்றும் திருவிழா குழுவினர் சிறப்பாக நடத்தினர். இந்த தேர்திருவிழா நாளன்று மட்டும் சுமார் 40 ஆயிரம் மக்கள் குவிந்ததால் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com