
உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் இருவர் பலி
உசிலம்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் நடுப்பட்டி உட்கடை மேலவெள்ளைமளைபட்டி கிராமத்தைச் சார்ந்த ராஜா மகன் அபிஷேக்(21), கீழவெள்ளைமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னையா மகன் ராஜ்குமார்(37) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது ஞாயிற்றுக்கிழமை நடுப்பட்டி காலனி அருகே நடந்த சாலை விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்தப்பநாயக்கனூர் காவல்துறையினர் இருவரது சடலத்தைக் கைப்பற்றி,உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்