சிதம்பரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மராத்தான் தொடர் ஓட்ட போட்டி: 600 பேர் பங்கேற்பு

சிதம்பரம் நகரில் வருவாய்த்துறை சார்பில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் 2021 ல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாரத்தான் தொடர் ஓட்ட போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மராத்தான் போட்டியை தொடங்கி வைத்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீஅபிநவ், பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.ஞானதேவன்.
சிதம்பரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மராத்தான் போட்டியை தொடங்கி வைத்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீஅபிநவ், பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.ஞானதேவன்.

சிதம்பரம்:
சிதம்பரம் நகரில் வருவாய்த்துறை சார்பில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் 2021 ல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாரத்தான் தொடர் ஓட்ட போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் தெற்குவீதி பாரத ஸ்டேட் வங்கி அருகே நடைபெற்ற மராத்தான் தொடர் ஓட்டப் போட்டியை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீ அபிநவ், அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.ஞானதேவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சிதம்பரம் உதவி ஆட்சியர் லி.மதுபாலன், டிஎஸ்பி த.ஆ.ஜோ.லாமேக், வட்டாட்சியர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

6 கிலோ மீட்டர் தொடர் ஓட்டம் தெற்குவீதியிலிருந்து புறப்பட்டு, 4 வீதிகள், பேருந்து நிலையம், காந்திசிலை வழியாக அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தை அடைந்தது. ஆண்கள் பிரிவில் ஊட்டியைச் சேர்ந்த எஸ்.நிகில்குமார் முதல் பரிசையும், ஊட்டி வி.மோனிஷ் இரண்டாவது பரிசையும், நடுக்குப்பத்தைச் சேர்ந்த ஹரிஹரன் மூன்றாவது பரிசையும், பெண்கள் பிரிவில் அண்ணாமலைப் பல்கலை. மாணவி எஸ்.எம். அதிரா முதல் பரிசையும், பல்கலை மாணவி எம்.ஜெயஶ்ரீ இரண்டாவது பரிசையும், சிதம்பரத்தைச் சேர்ந்த கே.யுகாதிஶ்ரீ மூன்றாவது பரிசையும் வென்றனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், இரண்டாவது பரிசு ரூ.7500-ம், மூன்றாவது பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. போட்டியில் வென்றவர்களுக்கு உதவி ஆட்சியர் லி.மதுபாலன் முன்னிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீஅபிநவ் கோப்பை மற்றும் ரொக்கபரிசை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com