கோவையில் ரயில் மோதி படுகாயமடைந்த யானைக்கு தொடர் சிகிச்சை

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே நவக்கரை மலைக்கிராமத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானை மீது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில், யானை படுகாயமடைந்தது.
கோவையில் ரயில் மோதி படுகாயமடைந்த யானைக்கு தொடர் சிகிச்சை (கோப்பிலிருந்து)
கோவையில் ரயில் மோதி படுகாயமடைந்த யானைக்கு தொடர் சிகிச்சை (கோப்பிலிருந்து)


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே நவக்கரை மலைக்கிராமத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானை மீது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில், யானை படுகாயமடைந்தது.

ரயில் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட யானை, படுகாயங்களுடன் நகர முடியாமல் படுத்துக் கிடக்கிறது. அதன் இடது தந்தம் நொறுங்கியுள்ளது. பின்னங்கால்களை அசைக்க முடியாமல் இருப்பதைப் பார்த்த கால்நடை மருத்துவர்கள், அதன் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சுகின்றனர்.

யானை எழுந்து நிற்க முடியாமல் படுத்தபடியே இருப்பதால், அங்கேயே கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். யானையை வேறு இடத்துக்குக் கூட்டிச் சென்று சிகிச்சை அளிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பின், யானையை வேறு இடத்துக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளிப்பதும் சிரமமாக இருக்கும் என்பதால், கால்நடை மருத்துவர்கள் யானையின் உடல்நிலையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.

நவக்கரை மலைக்கிராமத்தை ஒட்டியிருக்கும் வனப்பகுதியில் வாழும் யானைகள், இந்த ரயில் தண்டவாளத்தைத் தாண்டிச் சென்றுதான் வாளையாறு ஆற்றில் நீர் அருந்த வேண்டும். எனவே, இந்த வனக் கிராமங்களைக் கடக்கும் ரயில்களை மெதுவாக இயக்க வேண்டும் என்று ஓட்டுநர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டாலும், சில ஓட்டுநர்களின் கவனக்குறைவாலும், அதிவேகத்தாலும் இதுபோன்ற விபத்துகள் அவ்வப்போது நேருவதாகவும் மலைக்கிராம மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com