நத்தம்: அதிமுக வேட்பாளர் விசுவநாதன் பிரசாரத்தில் பணம் விநியோகித்ததாக புகார்

நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஆர்.விசுவநாதன் திங்கள்கிழமை
நத்தம்: அதிமுக வேட்பாளர் விசுவநாதன் பிரசாரத்தில் பணம் விநியோகித்ததாக புகார்
நத்தம்: அதிமுக வேட்பாளர் விசுவநாதன் பிரசாரத்தில் பணம் விநியோகித்ததாக புகார்

திண்டுக்கல்: நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஆர்.விசுவநாதன் திங்கள்கிழமை பிரசாரத்தை தொடங்கிய நிலையில், வரவேற்பு அளித்த பொதுமக்களுக்கு பணம் விநியோகித்ததாக எதிர்கட்சிகள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக செயலருமான ஆர்.விசுவநாதன் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இதனை அடுத்து, நத்தம் அடுத்துள்ள முளையூர் பகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை விசுவநாதன் திங்கள்கிழமை தொடங்கினார். அங்குள்ள நல்லறவான் சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது அவர் பேசியதாவது: நத்தம் தொகுதியை பொறுத்தவரை நான் (விசுவநாதன்) சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த நேரத்தில், ரூ.500 கோடிக்கு மேல் வளர்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய கோரிக்கைகளையும் புயல் வேகத்தில் நிறைவேற்றுவதற்கு பொதுமக்கள் எனக்கு வாய்ப்பளிக்கும் வகையில் மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். குறிப்பாக நத்தம் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆயத்த ஆடை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்றார்.

பணம் விநியோகம்: பிரசாரத்தின் போது, நத்தம் விசுவநாதனுக்கு ஆரத்தி எடுத்தப் பெண்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது. அதேபோல், வாக்கு சேகரிப்பின் போது திரண்டிருந்த தொண்டர்களுக்கு, தனது சட்டை பையிலிருந்து பணத்தை எடுத்து நத்தம் விசுவநாதன் வழங்கினார். இதுதொடர்பான காட்சிகள், சமூக ஊடகங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சியிலும் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் சோதனை மேற்கொள்ளும் தேர்தல் பறக்கும்படையினர், பகிரங்கமாக வாக்கு  பணம் விநியோகிக்கும் நத்தம் விசுவநாதன் மற்றும் அதிமுகவினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்கட்சிகள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்படும் என திமுக உள்ளிட்ட எதிர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com