சென்னையில் மீண்டும் 2 ஆயிரத்தை நெருங்கும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை

சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,979 ஆக அதிகரித்துள்ளது.  அதுபோல, ஒரு நாள் பாதிப்பு மெல்ல அதிகரித்து 300-ஐ நெருங்குகிறது.
சென்னையில் மீண்டும் 2 ஆயிரத்தை நெருங்கும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை
சென்னையில் மீண்டும் 2 ஆயிரத்தை நெருங்கும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,979 ஆக அதிகரித்துள்ளது.  அதுபோல, ஒரு நாள் பாதிப்பு மெல்ல அதிகரித்து 300-ஐ நெருங்குகிறது.

சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில், சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 277 பேரும் கோடம்பாக்கத்தில் 221பேரும் அண்ணாநகரில் 210 பேரும் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை, அனைத்து மண்டலங்களிலும் 200-க்கும் குறைவான கரோனா நோயாளிகள் இருந்த நிலையில், கடந்த வாரம் முதல் கோடம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில மண்டலங்களில் பாதிப்பு 200க்கும் அதிகமாக உள்ளது.

இன்று காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,38,820 ஆக உள்ளது. அவர்களில் 2,32,663 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 4,178 பேர் கரோனாவுக்கு பலியாகிவிட்டனர்.

மார்ச் மாதத்தில் கரோனா தொற்றுப் பரவல் எவ்வாறு படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது என்பதை இந்த புள்ளி விவரத்தைப் பார்த்தாலே புரியும்.

மார்ச் 14: 294
மார்ச் 13: 271
மார்ச் 12: 265
மார்ச் 11: 292
மார்ச் 10: 275
மார்ச் 09: 236
மார்ச் 08: 229
மார்ச் 07: 251
மார்ச் 06: 243
மார்ச் 05: 225
மார்ச் 04: 189
மார்ச் 03: 184
மார்ச் 02: 167
மார்ச் 01: 171
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com