வன்னியர்கள் இடஒதுக்கீடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்துசெய்யக்கோரிய 2 வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்துசெய்யக்கோரிய 2 வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியா், வன்னியக் கவுண்டா், வன்னிய குல ஷத்ரியா் உள்ளிட்ட 7 பிரிவினருக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. 
ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கியுள்ளதால், 6 மாதங்களுக்கு தற்காலிகமாக இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்துசெய்யக்கோரிய 2 வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com