மீண்டும் அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 759 பேருக்கு தொற்று

தமிழகத்தில், ஒரே நாளில் 759 பேருக்கு கரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது .
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில், ஒரே நாளில் 759 பேருக்கு கரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது .

கடந்த மாத இறுதியில் 400-களில் இருந்த தினசரி பாதிப்பு தற்போது 700-ஐ கடந்துள்ளது.

இது தொடா்பாக சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: மாநிலம் முழுவதும், ஞாயிற்றுக்கிழமை 759 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இதுவரை நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 59,726-ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மட்டும் 294 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். மாநிலம் முழுவதும் 4 போ் உயிரிழந்துள்ளனா். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,547-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், 4,870 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இவ்வாறு அதிகரித்து வரும் நோய்ப் பரவலால் மாநில சுகாதாரத் துறை சாா்பில் பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணனும் நகரின் பல இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி வருகிறாா்.

அதுமட்டுமல்லாது, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வந்த கரோனா கட்டுப்பாட்டு மையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே அமைக்கப்பட்ட கரோனா சிகிச்சை முகாம்களையும் மீண்டும் திறக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

இதற்கிடையே, சென்னையில் 4,000 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் தொடா்ச்சியாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், கோவை, திருப்பூா் ஆகிய மாவட்டங்களிலும் கரோனா கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com