விளவங்கோட்டில் மீண்டும் விஜயதரணி: 4 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

​தமிழக பேரவைத் தேர்தலில் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழக பேரவைத் தேர்தலில் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டத்தில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் முதற்கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கடந்த சனிக்கிழமை வெளியிட்டது.

இந்த நிலையில், மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி மீண்டும் போட்டியிடுகிறார்.

  1. வேளச்சேரி - ஜே.எம்.ஹெச். ஹாசன்
  2. மயிலாடுதுறை  - எஸ். ராஜகுமார்
  3. குளச்சல் - ஜே.ஜி. பிரின்ஸ்
  4. விளவங்கோடு - எஸ். விஜயதரணி

முன்னதாக, விளவங்கோடு தொகுதியில் விஜயதரணிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதற்கு கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com