சீமான் ஆண்டு வருமானம் ரூ.1,000 மட்டுமே: சொத்து மதிப்பு ரூ.31 லட்சம்

திருவொற்றியூா் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கடந்த நிதியாண்டில் பெறப்பட்டுள்ள ஆண்டு வருமானம் ரூ.1,000 மட்டுமே
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்

திருவொற்றியூா்: திருவொற்றியூா் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கடந்த நிதியாண்டில் பெறப்பட்டுள்ள ஆண்டு வருமானம் ரூ.1,000 மட்டுமே என வேட்புமனுவுடன் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில் தெரிவித்துள்ளாா்.

சீமான் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவுடன் இணைத்துள்ள உறுதிமொழிப் பத்திரத்தில்

2019-20-ம் ஆண்டு மொத்த வருமானம் ரூ.1,000 மட்டுமே எனவும், தனது மனைவி கயல்விழியின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம். ரொக்கப் பணம், காா், தங்க நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.31 லட்சம். மனைவியின் அசையும் சொத்து மதிப்பு ரூ. 63 லட்சம் எனவும் இதில் 200 சவரன் தங்க நகைகளின் மதிப்பும் அடங்கும். தனக்கு வீடு, நிலங்கள் உள்ளிட்ட அசையாத சொத்து ஏதும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள சீமான் தனது மனைவிக்கு ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் வீடு, நிலங்களும், ரூ. 6 லட்சம்வரை வங்கிகளில் கடன் இருப்பதாகவும், தன்மீது 7 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com