
ஓமலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மணி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மணி புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் ஆர்.மணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனையொட்டி ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா பிரியாவிடம் அதிமுக வேட்பாளர் மணி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனையடுத்து வேட்பாளர் உறுதிமொழியையும் அவர் ஏற்றுக்கொண்டார்.