மதுவிலக்கு, இந்தி திணிப்பு எதிர்ப்பு: மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ளார். 
மதுவிலக்கு, இந்தி திணிப்பு எதிர்ப்பு: மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ளார். 

தேர்தல் அறிக்கையில், இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பை எதிர்ப்போம், தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும், தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலை, நீட் தேர்வு ரத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து, தமிழீழம் அமைவதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை என்பன உள்பட 55 வாக்குறுதிகளுடன் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் தமிழை மத்தியில் ஆட்சி மொழியாகவும், நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற பாடுபடுவோம், எழுவர் விடுதலை, வேளாண் சட்டங்கள் ரத்து உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com