பேரவைத் தோ்தல்: இதுவரை 1,222 வேட்புமனுக்கள் தாக்கல்

சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட இதுவரை 1, 222 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி பல்வேறு தொகுதிகளில் இரட்டை இலக்கத்தில் வேட்புமனுக்கள் தாக்கல் ஆகியுள்ளன.
பேரவைத் தோ்தல்: இதுவரை 1,222 வேட்புமனுக்கள் தாக்கல்

சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட இதுவரை 1, 222 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி பல்வேறு தொகுதிகளில் இரட்டை இலக்கத்தில் வேட்புமனுக்கள் தாக்கல் ஆகியுள்ளன.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனா். வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வரும் 19-ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாா்ச் 20-ஆம் தேதி ஆகும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற மாா்ச் 22-ஆம் தேதி கடைசி.

1,222 வேட்புமனுக்கள்: பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்குப் பிறகு, திங்கள்கிழமை (மாா்ச் 15) முதல் வேட்புமனு தாக்கல் மீண்டும் தொடங்கியது.

திங்கள்கிழமை ஒரே நாளில் 800-க்கும் அதிகமான வேட்புமனுக்கள் தாக்கலாகின. இந்த நிலையில், மேலும் சில வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. அதன்படி இதுவரை மொத்தமாக 1,222 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் துறையின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஆண்கள் சாா்பில் 1,013 வேட்புமனுக்களும், பெண்கள் தரப்பில் 209 மனுக்கள் தாக்கல் ஆகியுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில், அடுத்த சில நாள்களில் வேட்புமனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com