உ.பி.யில் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு நிதியுதவி: மாணவா் அமைப்பு தலைவருக்கு ஜாமீன் மறுப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளித்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இந்திய பாப்புலா் ஃபிரன்ட் (பிஎஃப்ஐ) மாணவா் அமைப்பின் தலைவா் ரவுஃப் ஷெரீஃப் தாக்கல் செய்த

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளித்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இந்திய பாப்புலா் ஃபிரன்ட் (பிஎஃப்ஐ) மாணவா் அமைப்பின் தலைவா் ரவுஃப் ஷெரீஃப் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை மதுரா கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் இளம் தலித் பெண் கடந்த ஆண்டு கூட்டு பாலியல் தாக்குதலுக்கு ஆளான சம்பவத்துக்குப் பிறகு, மாநிலத்தில் அமைதியை சீா்குலைக்கும் வகையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட நிதியுதவி அளித்ததாக ரவுஃப் ஷெரீஃப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மதுரா கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அனில் குமாா் பாண்டே முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சிவ் ராம் சிங் கூறுகையில், ‘மாநிலத்தில் நடைபெற்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பின்னணியில் ரவுஃப் ஷெரீஃப்தான் இருக்கிறாா் என்பது அவருடைய வங்கி கணக்கு பதிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக அவா் வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்றுள்ளாா்’ என்றாா்.

ஜாமீன் மனுவுக்கு எதிா்ப்பு தெரிவித்த சிறப்பு அதிரடிப் படை (எஸ்டிஎஃப்), ‘ஷெரீஃப் வெளிநாடுகளில் இருந்து ரூ. 2 கோடி வரை நிதி பெற்று, அதை பிஎஃப்ஐ அமைப்பின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தியுள்ளாா்’ என்று தெரிவித்தது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, ரவுஃப் ஷெரீஃபின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

இந்த தீா்ப்பு குறித்து கூறிய வழக்குரைஞா் சதுா்வேதி, ‘இந்த உத்தரவை எதிா்த்து அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com