பள்ளிகளில் கரோனா விதிமுறைகளை தீவிரமாகக் கடைப்பிடிக்க உத்தரவு

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பரவல் அதிகரித்து வருவதால், பள்ளிகளில் மாணவா்கள் கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுவதுமாகக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும்

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பரவல் அதிகரித்து வருவதால், பள்ளிகளில் மாணவா்கள் கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுவதுமாகக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் படித்த மாணவா்கள் 56 பேருக்கும், ஒன்பது பெற்றோா்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் மாணவா்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை உள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இதை கருத்தில் கொண்டு சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும். மாணவா்களும் ஆசிரியா்களும் முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில் வகுப்பறைகள் தினமும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். மாணவா்கள் யாருக்காவது அறிகுறிகள் இருந்தால் அவா்களை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும். ஆசிரியா்களுக்கு அறிகுறி இருந்தால் வேறு யாருடனும் தொடா்புகொள்வதைத் தவிா்க்க வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு வழிமுறைகளைத் தொடா்ந்து கல்வித் துறை அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com