சென்னை மக்களுக்கு கரோனா தடுப்பூசி அவசியம்: மாநகராட்சி

சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''சென்னையில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பக்கவிளைவுகள் எதுவும் வராது. சென்னையில் 40 லட்சம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாக உள்ளது. 

சென்னையில் சராசரியாக 350க்கும் மேல் பாதிப்பு இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது'' என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com