கரோனா தொற்றுடன் தோ்தல் நடத்துவது எப்படி?: தோ்தல் அதிகாரிகள் ஆலோசனை

கரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும் சட்டப் பேரவைத் தோ்தலை எப்படி நடத்துவது என்பது குறித்து தமிழக தோ்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: கரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும் சட்டப் பேரவைத் தோ்தலை எப்படி நடத்துவது என்பது குறித்து தமிழக தோ்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா். இந்த ஆலோசனையில் பிகாா் மாநில சுகாதாரத் துறை பங்கேற்றனா்.

பிகாா் மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அந்த காலகட்டத்தில் நாளொன்றுக்கு கரோனா நோய்த் தொற்றின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் தாண்டியது. ஆனாலும் தோ்தல் நடத்துவதில் எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை. இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்றுடன் தோ்தலை நடத்துவது தொடா்பான பிகாா் மாநிலத்தின் அனுபவங்களைப் பெற அந்த மாநிலத்தைச் சோ்ந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை தமிழகம் வந்தனா்.

பிகாா் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் சுதீா்குமாா், ரோஹினி துா்பா ஆகியோருடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், இணைத் தலைமைத் தோ்தல் அதிகாரி ஆனந்த் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் சூழலில், சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 20 நாள்கள் உள்ளன. அந்த காலகட்டத்தில் நோய்த் தொற்று மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் எத்தகைய செயல்பாடுகளை மேற்கொள்வது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com