விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் மனு தாக்கல்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கே.ஜெ.பிரவீன்குமாரிடம் மனுத்தாக்கல் செய்தார் பிரேமலதா விஜயகாந்த்.
விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கே.ஜெ.பிரவீன்குமாரிடம் மனுத்தாக்கல் செய்தார் பிரேமலதா விஜயகாந்த்.


கடலூர்: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதற்காக வியாழக்கிழமை காலையில் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கே.ஜெ.பிரவீன்குமாரிடம் மனுத்தாக்கல் செய்தார். இளைஞரணி செயலாளர் சுதீஷ், அமமுக அமைப்பு செயலாளர் கே.எஸ்.கே.பாலமுருகன் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெற்ற வெற்றி மீண்டும் கிடைக்கும். இத்தொகுதி மக்கள் எங்கள் உயிரோடு கலந்து விட்டனர் என்றார்.

அமமுகவை விட அதிக வாக்கு சதவீதம் இருந்தும் ஏன் டி.டி.வி.தினகரனை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com