திருப்பூர் தெற்கு: அதிமுக, அமமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு

திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் சு.குணசேகரன், அமமுக வேட்பாளர் அ.விசாலாட்சி ஆகியோர் ஒரே நேரத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் தெற்கு: அதிமுக, அமமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு
திருப்பூர் தெற்கு: அதிமுக, அமமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் சு.குணசேகரன், அமமுக வேட்பாளர் அ.விசாலாட்சி ஆகியோர் ஒரே நேரத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், திருப்பூர் - காங்கயம் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியப் பின்னர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு சு.குணகேரன் தனது காரில் வியாழக்கிழமை காலை 11.10 மணி அளவில் வந்தார்.

முன்னதாக அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் மேயர் அ.விசாலாட்சியும் மாநகராட்சி அலுவலகத்துக்கு அதே நேரத்தில் தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோருடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். 

திருப்பூர் தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமாரிடம் வியாழக்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார் அமமுக வேட்பாளர் அ.விசாலாட்சி
திருப்பூர் தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமாரிடம் வியாழக்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார் அமமுக வேட்பாளர் அ.விசாலாட்சி

அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவல் துறையினர் வேட்பாளர் மற்றும் தொண்டர்களைத் தடுத்து நிறுத்தினர். மேலும், மாநகராட்சி அலுவலகத்தின் கதவையும் பூட்டினர். அப்போது காவல்துறையினருடன் அமமுக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதன் பிறகு வேட்பாளருடன் இருவர் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து, அமமுக வேட்பாளர் அ.விசாலாட்சி மற்றும் இருவரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய மாநகராட்சி அலுவலகத்துக்கு உள்ளே அனுமதித்தனர்.

தொண்டர்கள் வாக்குவாதம்: எனினும் வேட்பாளர் உள்ளே சென்ற பிறகும் 50க்கும் மேற்பட்ட அமமுக மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி, சாலையில் இருந்தபடியே தங்களது சின்னமான குக்கர் மற்றும் கொடிகளுடன் கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்களைக் கலைந்து செல்லக்கோரி அறிவுறுத்தியதுடன் மாநகராட்சி அலுவலகம் முன்பாக உள்ள சாலையோரத்தில் இரும்புத் தடுப்புக்களையும் காவல் துறையினர் அமைத்திருந்தனர்.

திருப்பூர் தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான க.சிவகுமாரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார் அதிமுக வேட்பாளர் சு.குணசேகரன்.
திருப்பூர் தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான க.சிவகுமாரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார் அதிமுக வேட்பாளர் சு.குணசேகரன்.

அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்: திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளரான சு.குணசேகரன் தேர்தல் நடத்தும் அலுவலரான சிவகுமாரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்புமனு தாக்கலின்போது மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பழனிசாமி, சிறுபான்மை பிரிவு பகுதி தலைவர் அப்துல்சுபான் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, அமமுக வேட்பாளர் அ.விசாலாட்சி தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரான சிவகுமாரிடம் தாக்கல் செய்திருந்தார். 

திருப்பூர் தெற்கு தொகுதி அமமுக வேட்பாளர் அ.விசாலாட்சி வேட்பு மனு தாக்கலின்போது மாநராட்சி அலுவலகம் முன்பாக குவிந்த அமமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர்.
திருப்பூர் தெற்கு தொகுதி அமமுக வேட்பாளர் அ.விசாலாட்சி வேட்பு மனு தாக்கலின்போது மாநராட்சி அலுவலகம் முன்பாக குவிந்த அமமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர்.

இதனிடையே, மாநகராட்சி அலுவலகம் முன்பாக தொண்டர்களுடன் வந்ததாக அமமுக வேட்பாளரான அ.விசாலாட்சி மீது தேர்தல் விதிமீறல் தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்படும் என்று திருப்பூர் தெற்கு காவல் துறையினர் தெரிவித்தனர்.

திருப்பூர் தெற்கு தொகுதியில் இரு முன்னாள் மேயர்களும், முன்னாள் துணை மேயரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும் நேரடியாக மோதுகின்றனர். அந்த வகையில் இன்று அதிமுக வேட்பாளரான சு.குணசேகரனும், அமமுக வேட்பாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சியும் வேட்பு மனுவைத்தாக்கல் செய்துள்ளனர்.

திருப்பூர் தெற்கு தொகுதி அமமுக வேட்பாளர் அ.விசாலாட்சி வேட்பு மனு தாக்கலின்போது மாநராட்சி அலுவலகம் முன்பாக குவிந்த அமமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர்.
திருப்பூர் தெற்கு தொகுதி அமமுக வேட்பாளர் அ.விசாலாட்சி வேட்பு மனு தாக்கலின்போது மாநராட்சி அலுவலகம் முன்பாக குவிந்த அமமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர்.

முன்னதாக, இதேத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் மேயர் க.செல்வராஜ் ஏற்கெனவே தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆகவே, திருப்பூர் தெற்கு தொகுதியில் முக்கிய வேட்பாளர்கள் 3 பேரும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். ஆகவே, இனிவரும் நாள்களில் திருப்பூர் தெற்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com