உசிலம்பட்டி அருகே விவசாயிகளுக்கு பூச்சி விரட்டி மருந்து செயல் விளக்கம்

மதுரை செல்லம்பட்டி வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் தங்கல் திட்டத்தின் கீழ் மதுரை மேலாண்மைக் கல்லூரி மாணவிகள் இயற்கை பூச்சி விரட்டி மருந்தை விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
உசிலம்பட்டி அருகே தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பூச்சி விரட்டி மருந்து செயல் விளக்கம் அளித்த மதுரை மேலாண்மைக் கல்லூரி மாணவிகள்
உசிலம்பட்டி அருகே தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பூச்சி விரட்டி மருந்து செயல் விளக்கம் அளித்த மதுரை மேலாண்மைக் கல்லூரி மாணவிகள்

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் தங்கல் திட்டத்தின் கீழ் மதுரை மேலாண்மைக் கல்லூரி மாணவிகள் இயற்கை பூச்சி விரட்டி மருந்தை விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

மதுரை மேலாண்மைக் கல்லூரி மாணவிகள் இயற்கை பூச்சி விரட்டி மருந்து குறித்து செல்லம்பட்டி வட்டாரத்தில் சக்கிலியாங்குலம் கிராம விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

விவசாயத்தில் பெரிய பிரச்னை, பயிர்களில் பூச்சி தாக்குதல். இதனால் விளைச்சல் பாதிப்பு அடைந்து பூச்சிகளை கட்டுப்படுத்த, பூச்சிக்கொல்லிகளுக்கு மருந்து அதிக விலைக்கு வாங்கும் சூழல் உள்ளது.

இந்நிலையில், ரசாயனங்களால் மண்வளம், சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. இதற்காக குறைந்த செலவில் எளிய முறையில் கற்பூர கரைசல் என இயற்கை மருந்தை சொந்தமாக தயாரித்து பயன்படுத்தினால் நெற்பயிரில் புகையான் பூச்சி, குருத்துப்பூச்சி, இலைசுருட்டல் பூச்சி, கத்திரி பயிரில் துண்டு துளைப்பான், காய் துளைப்பான் ஆகியவற்றையும், பப்பாளி பழத்தில் மாவுபூச்சியையும் கட்டுப்படுத்தும் என்கின்றனர் மாணவிகள்.

இந்த கரைசல் மருந்தினை தயாரிக்க வேப்பெண்ணெய், மாட்டு கோமியம், காதி சோப்பு மற்றும் கற்பூரம் தேவை.

பயிர் விளைச்சல் ஒரு மாதத்திற்கு குறைவாக இருந்தால், ஐந்து கற்பூர வில்லைகள் கொண்டு தயார் செய்து இதனை ஒரு மாதத்திற்கு மேலான பயிர்களான கத்திரி, வெண்டை போன்ற பெரிய செடிகளுக்கு வெயில் குறைவான காலங்களிலும் இந்த இயற்கை மருந்தினை பயன்படுத்தலாம். சிறந்த இயற்கை மருந்தாகவும் பூச்சி விரட்டியாகவும் இருப்பதுடன், பயிர் ஊக்கியுமாக உள்ளது. பயிர் வளர்ச்சி, காய்களின் தரம் அதிகரிக்கும் என விவசாயிகளிடம் விளக்கி இயற்கை மருந்தினை பயன்படுத்த வேண்டும் என மாணவிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com