பாஜக வேட்பாளர் குஷ்புவிடம் 8.55 கிலோ தங்க நகை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்புவிடம் 8.55 கிலோ தங்க நகைகள் இருப்பதாக அவரது பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஷ்புவிடம் 8.55 கிலோ தங்க நகை
குஷ்புவிடம் 8.55 கிலோ தங்க நகை


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்புவிடம் 8.55 கிலோ தங்க நகைகள் இருப்பதாக அவரது பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு நேற்று தனது வேட்பு மனுவைத்தாக்கல் செய்தார். அதனுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பிரமாணப் பத்திரத்தில், தன் கையிருப்பாக ரூ.2.15 லட்சம் ரொக்கம் இருப்பதாகவும், 8.55 கிலோ தங்க நகைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தங்க நகைகளின் மதிப்பு ரூ.3,42,00,000 (ரூ.3.42 கோடி)  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 75 கிலோ வெள்ளிப் பொருள்கள் இருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.46.80 லட்சம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மொத்தமாக தன்னிடம் இருக்கும் அசையும் சொத்து மதிப்பு ரூ.4,55,45,693 என்றும், தனது கணவர் சுந்தரிடம் இருக்கும் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.1,83,98,058 என்றும் தெரிவித்துள்ளார். 

குஷ்பு பெயரில் இருக்கும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.5,28,65,842 என்றும், கணவர் சுந்தர் சி.யின் பெயரில் இருக்கும் அசையா சொத்துகளின் மதிப்பு ரு.13,75,94,000 என்றும் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், குஷ்புவுக்கு ரூ.3.45 கோடி கடனும், கணவர் சுந்தருக்கு ரூ.5.55 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை குஷ்புவின் ஆண்டு வருமானம் ரூ.46,24,630 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகையும், பாஜக வேட்பாளருமான குஷ்பு எட்டாவது வரை படித்திருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com