தேர்தல் பிரசாரம்: திருப்புவனத்தில் காய்கறி வியாபாரியாக மாறி வாக்கு சேகரித்த மானாமதுரை அதிமுக எம்எல்ஏ

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தேர்தல் பிரசாரம் செய்த மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.நாகராஜன் எம்.எல்.ஏ தினசரி காய்கறிச் சந்தையில் காய்கறி வியாபாரியாக மாறி  வாக்கு சேகரித்தார்.
மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.நாகராஜன் எம்.எல்.ஏ திருப்புவனத்தில் காய்கறி கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்து பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.
மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.நாகராஜன் எம்.எல்.ஏ திருப்புவனத்தில் காய்கறி கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்து பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தேர்தல் பிரசாரம் செய்த மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.நாகராஜன் எம்.எல்.ஏ தினசரி காய்கறிச் சந்தையில் காய்கறி வியாபாரியாக மாறி  வாக்கு சேகரித்தார்.

தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. மானாமதுரை(தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கு அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ நெட்டூர் எஸ்.நாகராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தமிழரசி போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு எம்எல்ஏ நாகராஜன் தொகுதி முழுவதும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்தமுறை போட்டி கடுமையாக இருப்பதால் நாகராஜன் திடீர் திடீர் என வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வாக்காளர்களை கவர்ந்து வருகிறார். 

திருப்புவனத்தில் அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பின் அங்குள்ள காய்கறி மார்கெட் பகுதிக்கு வந்த வேட்பாளர் எம்எல்ஏ நாகராஜன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதன்பின் ஒரு காய்கறி கடைக்குச் சென்ற அவர் அங்கு உட்கார்ந்து சுமார் ஒரு மணி நேரம் காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டார். காய்கறி கேட்டு வந்த பெண்களிடம் மொத்தமாக காய்கறிகளை எடை போட்டு கொடுத்தனுப்பினார். கடைக்கு காய்கறிகள் வாங்க வந்த பெண்களிடம் தேர்தலில் தன்னை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார். 

தேர்தல் வருவதால் பல வேட்பாளர்களும் பிரசாரத்தில் பல அவதாரங்கள் எடுத்து வரும் நிலையில் ஆளும் கட்சி எம்எல்ஏ நாகராஜன் மக்களை கவர காய்கறி வியாபாரியாக மாறி வாக்கு சேகரித்த சம்பவம் அனைவரைக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com