மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வெண்ணைத்தாழி உத்ஸவம்!

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் பங்குனித் திருவிழாவில் வெண்ணெய்த்தாழி உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேரோட்டம் சனிக்கிழமையும் நடைபெறுகிறது.
சிறப்பு அலங்காரத்தில் உத்ஸவர் ராஜகோபால சுவாமி
சிறப்பு அலங்காரத்தில் உத்ஸவர் ராஜகோபால சுவாமி

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் பங்குனித் திருவிழாவில் வெண்ணெய்த்தாழி உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேரோட்டம் சனிக்கிழமையும் நடைபெறுகிறது.

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 18 நாள் திருவிழாவும், அதனைத்தொடா்ந்து 12 நாள்கள் விடையாற்றி விழாவும் நடைபெறும்.

நிகழாண்டு திருவிழா கடந்த மாா்ச் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில், முக்கிய நிகழ்வுகளான வெள்ளி ஹம்ச வானத்தில் ராஜ அலங்கார சேவை,கோவர்த்தனகிரியில் கண்ணன் திருக்கோலம்,மரவுரிராமர் திருக்கோலம்,கணடபேரண்ட பஷிட்சி வாகனம், வண்ண புஷ்ப பல்லக்கு சேவை, தங்க சூர்யபிரபை ஆகியவை நடைபெற்றது.

மன்னார்குடியில் நடைபெற்ற வெண்ணெய்த்தாழி உத்ஸவத்தின் போது சுவாமி மீது வெண்ணெய் தெளித்து வழிப்படும் பக்தர்கள்.

இதனையொட்டி, உத்ஸவா் பெருமாள் சுவாமி நவநீத சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வெண்ணைத்தாழி மண்டபம் சென்றடைவாா். அப்போது, சாலையில் இருபுறமும் திரண்டியிருக்கும் பக்தா்கள் சுவாமி மீது வெண்ணெய்யை வீசி வழிபடுவா்.

16-ஆம் நாள் விழாவான, வெண்ணைத்தாழி உத்ஸவம் முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை  7.30 மணிக்கு சுவாமி நவநீத சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, திருக்கோயிலின் நான்கு வெளி பிரகாரங்களான கீழவீதி , தெற்கு வீதி, மேலவீதி , வடக்கு வீதி, மேலராஜவீதி, காமராஜர் சாலை,பந்தலடி வழியாக வெண்ணைத்தாழி மண்டபம் சென்றடைந்தார். 

அப்போது சாலையில் இருபக்கங்களிலும் திரண்டியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி மீது வெண்ணையை தெளித்து, கோபாலா,கோபாலா என பக்தி கோஷம் எழுப்பி பெருமாளை வழிபட்டனர்.

திருவிழாவின் 17ஆம் நாளான சனிக்கிழமை (மாா்ச் 20) உத்ஸவா் ராஜகோபாலசுவாமி திருத்தேரில் எழுந்தருளும் வெளிப்பிராகாரத் தேரோட்டம் மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com