பாஜகவின் கிளைக் கழகமாக அதிமுக செயல்படுகின்றது: ஸ்டாலின்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார். 
தக்கலையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார் மு.க.ஸ்டாலின்
தக்கலையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார். 

அப்போது அவர் பேசும்போது,

குமரி மாவட்டத்தில் எப்போதுமே திமுக கூட்டணிதான் வெற்றி பெற்றுள்ளது என்பது வரலாறு. அந்த வரலாறு தொடர வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய கூட்டணி ஆட்சியில் திமுக 10 ஆண்டுகள் இருந்ததே என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார். நான் கேட்கிறேன் நீங்கள் 10 ஆண்டு தமிழகத்தில் ஆட்சி செய்கிறீர்களே என்ன செய்தீர்கள்?

முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறையில் ரூ.4000 ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது. இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. எடப்பாடி பழனிச்சாமிக்கு தெம்பிருந்தால், துணிவிருந்தால் அந்த வழக்கைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் உச்சநீதிமன்றத்தில் சென்று தடை வாங்கியுள்ளார்.

முதல்வரின் உறவினர்கள், நண்பர்கள், வேண்டியவர்கள் வீட்டில் ரெய்டு நடந்த பின்னர் மோடி அரசின் பாதம் தாங்கிய பழனிசாமியாக மாறிவிட்டார். தமிழக உரிமைகளை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்.

தற்போது பாஜகவின் கிளைக் கழகமாக அதிமுக செயல்படுகின்றது. ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும் அப்போது தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். 

தமிழக உரிமைகளைப் பாதுகாக்க, வேலை வாய்ப்புகளை உருவாக்கிட கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் விஜயகுமாருக்கு கை சின்னத்திலும், பத்மநாபபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் மனோ தங்கராஜுக்கு உதய சூரியன் சின்னத்திலும்,  விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் விஜயதரணிக்கு கை சின்னத்திலும், குளச்சல் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பிரின்சுக்கு கை சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com