நாமக்கல் மாவட்டத்தில் வேட்புமனு பரிசீலனை தொடங்கியது

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனை.
நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனை.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (பழங்குடியினர்), நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய ஆறு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்றது. இதில் 6 தொகுதிகளிலும் மொத்தமாக 214 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் அதிகபட்சமாக குமாரபாளையம் தொகுதியில்  45 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று சனிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பொது பார்வையாளர்கள் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டது. இதில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com