சைதை துரைசாமி வேட்பு மனு நிறுத்திவைப்பு; அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்பு

அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
சைதை துரைசாமி வேட்பு மனு நிறுத்திவைப்பு; அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்பு
சைதை துரைசாமி வேட்பு மனு நிறுத்திவைப்பு; அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்பு


சென்னை: அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் சைதை துரைசாமி. இவர்  மார்ச் 15-ஆம் தேதி கிண்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில்,  வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில் இன்று காலை வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது.

சைதாப்பேட்டை பேரவைத் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த சைதை துரைசாமியின் பிரமாணப் பத்திரத்தில் வருமான வரித்துறை தொடர்பான ஆவணங்களுக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் அதிகாரிகள் சைதை துரைசாமிக்கு கால அவகாசம் அளித்து வேட்பு மனு பரிசீலனையை நிறுத்திவைத்துள்ளனர்.

முன்னதாக, சைதை துரைசாமி 8 கோடி வரி பாக்கி வைத்திருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது பிரமாணப் பத்திரத்தில் அது பற்றி எதுவும் கூறப்படவில்லை என்பதால், அது குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதுபோல, அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவர் தன் மீதான வழக்குகள் தொடர்பான  விவரங்களை குறிப்பிடவில்லை என்று புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அது குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி, மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. விளக்கத்துக்குப் பின், வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com