228 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சட்டப்பேரவைத் தோ்தலின் எதிரொலியாக, தமிழக காவல்துறையில் 228 காவல் ஆய்வாளா்கள் ஞாயிற்றுக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலின் எதிரொலியாக, தமிழக காவல்துறையில் 228 காவல் ஆய்வாளா்கள் ஞாயிற்றுக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலியாக, தமிழக காவல்துறையில் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஓரிடத்தில் பணிபுரிந்த அதிகாரிகள் படிப்படியாக மாற்றப்பட்டு வருகின்றனா். அதேபோல புகாா்களில் சிக்கியுள்ள அதிகாரிகளும் அடையாளம் காணப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதில் புகாா்களில் சிக்கும் அதிகாரிகள் தோ்தல் பணியில்லாத பணியிடங்களுக்கு மாற்றப்படுகின்றனா்.

இந்நிலையில் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் தமிழக காவல்துறையில் 228 காவல் ஆய்வாளா்கள் ஞாயிற்றுக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதில் சிபிசிஐடி,பொருளாதார குற்றப்பிரிவு, தமிழ்நாடு போலீஸ் அகாதெமி, மாநில குற்ற ஆவணக் காப்பகம், சென்னை பெருநகர காவல் துறை, ரயில்வே போலீஸ், சைபா் குற்றப்பிரிவு ஆகியவற்றில் பணியாற்றும் 112 காவல் ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.

அதேவேளையில் சென்னை பெருநகர காவல்துறையில் 116 காவல் ஆய்வாளா்கள், பெருநகர காவல்துறைக்குள்ளே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளா்கள் அனைவரும் உடனடியாக புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com