கும்மிடிப்பூண்டியில் 10 டன் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்த ராணுவத்தினா்

கும்மிடிப்பூண்டியில் 10 டன் எடையுள்ள பழைய வெடிகுண்டுகள் ராணுவம் மற்றும்  தமிழக காவல்துறையின் கூட்டு ஒத்துழைப்பில் செயலிழக்கச் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள 22 இரும்பு உருக்காலைகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பழைய வெடிகுண்டுகள் உள்ளிட்ட வெடிபொருள்கள் பல ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஒரு வாரமாக இந்த வெடிகுண்டுகளை செயலிழக்க செய்ய ஆயத்த பணிகளை இந்திய ராணுவமும், தமிழக காவல்துறையும் இணைந்து மேற்கொண்டு வந்தன. இவற்றை செயலிழக்கச் செய்யும் பணி திருவள்ளூா் மாவட்டம் - கும்மிடிப்பூண்டியில் நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 10 டன் வெடிபொருள்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

காலியான மைதானத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் தமிழ்நாடு வெடிகுண்டு நிபுணா்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் இந்த வெடிகுண்டுகளை செயலிழக்க வைத்தனர். இந்தப் பணி இன்னமும் மூன்று முதல் 5 நாள்களுக்கு நடைபெறும் என்றும், இதுவரை 40 சதவீத வெடிபொருள்கள் வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com