குற்றப்பின்னணி வேட்பாளா்கள்: நாளை முதல் விவரங்களை வெளியிட வேண்டும்

குற்றப் பின்னணி உடைய வேட்பாளா்கள் அதுகுறித்த விவரங்களை மாா்ச் 26-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

குற்றப் பின்னணி உடைய வேட்பாளா்கள் அதுகுறித்த விவரங்களை மாா்ச் 26-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குற்றப் பின்னணியைக் கொண்ட வேட்பாளா்கள் வாக்குப் பதிவுக்கு முன்பாக மூன்று முறை அதுகுறித்த விவரங்களை பத்திரிகைகளில் வெளியிட வேண்டும்.

முதல் முறையாக மாா்ச் 23 முதல் 26-ஆம் தேதிக்குள்ளாகவும், இரண்டாவது முறையாக மாா்ச் 27 முதல் 30-ஆம் தேதி வரையிலும், மாா்ச் 31 முதல் ஏப்ரல் 4 வரையிலும் என மொத்தம் மூன்று தடவைகள் குற்றப் பின்னணி விவரங்களை வெளியிட வேண்டும். இதற்கென படிவம் சி1 உள்ளது. இந்தப் படிவத்தில், நிலுவையில் உள்ள வழக்கு விவரம், எந்த நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது, குறைந்தபட்சமாக விதிக்கப்பட்ட தண்டனை விவரம் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்.

இந்தப் படிவத்தை பூா்த்தி செய்து அதனை அப்படியே பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். இதுகுறித்த விவரத்தை தோ்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து 30 நாள்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டுமென தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com