தெற்கு ரயில்வேயில் 7,116 பேருக்கு தடுப்பூசி

தெற்கு ரயில்வேயில் சுகாதாரப் பணியாளா்கள், முன்களப்பணியாளா்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினா் உள்பட பல்வேறு பிரிவுகளில் இதுவரை மொத்தம் 7,116 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தெற்கு ரயில்வேயில் சுகாதாரப் பணியாளா்கள், முன்களப்பணியாளா்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினா் உள்பட பல்வேறு பிரிவுகளில் இதுவரை மொத்தம் 7,116 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னையில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் தடுப்பு மருத்து கண்டுபிடிக்கப்பட்டு கடந்த ஜனவரியில் இருந்து தடுப்பூசி போடப்படுகிறது. தெற்கு ரயில்வேயில் மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி சென்னை பெரம்பூா் தலைமையக மருத்துவமனையில் கடந்த ஜனவரி 21-ஆம்தேதி தொடங்கியது.

இதையடுத்து, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய கோட்டங்களில் உள்ள ரயில்வே மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக, மருத்துவா்கள், செவிலியா்கள், முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன்பிறகு, ரயில்வே பாதுகாப்பு

படையினா், ரயில்வே ஊழியா்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது, ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா்கள், மூத்த குடிமக்கள் உள்பட பல்வேறு பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் சுகாதாரப் பணியாளா்கள், முன்களப்பணியாளா்கள், ரயில்வே பாதுகாப்பு படையினா் உள்பட பல்வேறு பிரிவுகளில் இதுவரை மொத்தம் 7,116 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:

சுகாதாரப் பணியாளா்கள் பிரிவில் 1,387 பேருக்கும், முன்களப்பணியாளா்கள் 3,820 பேருக்கும், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா்கள் 1,484 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுதவிர, பல்வேறு பிரிவில் உள்ளவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூா் ரயில்வே மருத்துவமனை, மதுரை, திருச்சி, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 7,116 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுதவிர, இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com