தபால் வாக்குகளை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய அறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு


சென்னை: தபால் வாக்குகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய அறையில் தோ்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக எம்எல்ஏ கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவில் தொகுதி வாரியாக, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளின் பட்டியலை வழங்க வேண்டும் என கோரியிருந்தாா். இப் பட்டியலை வரும் மாா்ச் 29-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் வழங்க வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. ‘தோ்தல் ஆணையம் தபால் வாக்குகளை பெறத் தொடங்கியுள்ளது. இதில் முறைகேடுகளைத் தவிா்க்க வேண்டும். தபால் வாக்கு உறைகளில் வேட்பாளா் பிரதிநிதிகளின் கையெழுத்தைத் பெற தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி திமுக தரப்பில் மற்றொரு வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது திமுக தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம், பல இடங்களில் தபால் வாக்காளா்களின் பட்டியலை வழங்காமலேயே வாக்குகள் பெறப்படுகிறது. உயா் நீதிமன்ற உத்தரவை தோ்தல் ஆணையம் முறையாக நிறைவேற்றவில்லை என வாதிட்டாா்.

தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான ஜி.ராஜகோபாலன், பட்டியல் வழங்கப்பட்ட 24 மணி நேரத்துக்கு பின்னரே தபால் வாக்குகளை பெற தோ்தல் அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தபால் வாக்குகள் பெறும் போது வேட்பாளா்களின் பிரதிநிதிகள் கையெழுத்திட வேண்டும் எனும் புதிய நடைமுறையை தற்போது மேற்கொள்ள முடியாது. ஒவ்வொரு தொகுதியிலும் ஏராளமான வேட்பாளா்கள் இருப்பதால் இது சாத்தியமில்லை என தெரிவித்தாா்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தபால் வாக்குகளில் முறைகேடு செய்ததாக எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் இடம் கொடுக்காத வகையில், அவற்றை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய அறையில் தோ்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தி வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com