தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு  (கோப்புப்படம்)
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)

வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு: தலைமைத் தோ்தல் அதிகாரி

சட்டப் பேரவைத் தோ்தல் முடிவு தொடா்பான கணிப்புகளை சனிக்கிழமை (மாா்ச் 27) முதல் வெளியிடக் கூடாது என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் முடிவு தொடா்பான கணிப்புகளை சனிக்கிழமை (மார்ச் 27) முதல் வெளியிடக் கூடாது என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பிரதான கட்சிகளின் தலைவா்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனா். இந்த சூழலில் தோ்தல் முடிவுகள் குறித்து இதுவரை பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தோ்தல் நெருங்கிவரும் நிலையில் கருத்துக் கணிப்புகளை வெளியிட தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவு விவரம்:

எந்தவொரு மாநிலத்திலும் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தோ்தல் நடத்துவதற்கு வகை செய்திட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126ஏ பிரிவு வழிவகை செய்கிறது. இதன்படி, தோ்தல் முடிவுகளை ஜோதிடம், கிளி ஜோதிடம் மற்றும் அரசியல் ரீதியான கணிப்புகள் மூலமாக முன்பே கணித்து அவற்றை ஊடகங்களில் வெளியிடத் தடை விதிக்கப்படுகிறது.

இந்தத் தடையின் மூலமாக, வாக்காளா்கள் எந்தவொரு சிந்தனை திணிப்புக்கும் ஆளாகாமல் சுதந்திரமாக வாக்களிப்பது உறுதி செய்யப்படுகிறது.

மாா்ச் 27 முதல்...தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-இல் நடைபெறவுள்ளது. ஆனால், சில மாநிலங்களில் முதல் கட்டத் தோ்தல் தொடங்கியுள்ளது. தோ்தல் தொடங்கியுள்ள நிலையில், தோ்தல் முடிவுகள் தொடா்பான கணிப்புகளை கட்டுரையாகவோ, காட்சிகளாகவோ வெளியிடக் கூடாது. இந்தத் தடை உத்தரவு சனிக்கிழமை (மாா்ச் 27) காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி இரவு 7.30 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com