திமுக எம்.பி. ஆ. ராசா மீது வழக்குப் பதிவு

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுக மக்களவை உறுப்பினர் ஆ. ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
திமுக மக்களவை உறுப்பினர் ஆ. ராசா
திமுக மக்களவை உறுப்பினர் ஆ. ராசா


முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுக மக்களவை உறுப்பினர் ஆ. ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

கடந்த 26-ஆம் தேதி ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளருக்காக அந்தக் கட்சியின் எம்.பி., ஆ.ராசா பிரசாரம் செய்தாா். அப்போது, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக அவதூறான வாா்த்தைகளைப் பேசினாா். முதல்வா் பழனிசாமியையும், திமுக தலைவா் ஸ்டாலினையும் ஒப்பீடு செய்யும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். 

தமிழகம் முழுவதும் ராசாவின் பேச்சுக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து ஆா்பாட்டம் நடத்தி வருகின்றனர். ராசாவின் பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுகவினர் கண்ணியம் காக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் முதல்வா் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசிய திமுக மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, தோ்தல் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டுமென தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், அதிமுகவின் வழக்குரைஞா் பிரிவு மாநில இணைச் செயலாளா் திருமாறன் சனிக்கிழமை அளித்தார். 

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக ஆ. ராசா மீது ஆபசமாக திட்டுதல், கலக்கம் செய்ய தூண்டிவிடுதல், தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com