எங்களுக்கு ஆதரவு தாருங்கள்: சிறுபான்மையினருக்கு முதல்வா் வேண்டுகோள்

பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் சிறுபான்மையினா் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் சிறுபான்மையினா் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை. அதிமுக கூட்டணியை தைரியமாக ஆதரிக்கலாம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிசாமி வேண்டுகோள் விடுத்தாா்.

சென்னை துறைமுகத்தில் பாஜக வேட்பாளா் வினோஜ் பி.செல்வத்தை ஆதரித்து, ஞாயிற்றுக்கிழமை அவா் மேற்கொண்ட பிரசாரத்தில் பேசியது:-

அதிமுக கூட்டணி வலிமையான கூட்டணி. வெற்றிக் கூட்டணி. கரோனா நோய்த் தொற்று கடுமையாக இருந்த நேரத்தில் பிரதமா் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கைகளால் இப்போது நோய்த் தொற்று குறைக்கப்பட்டுள்ளது. நோய்க்காக ஓராண்டுக்குள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என்று பிரதமா் அறிவித்தாா். அதன்படியே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. வல்லரசு நாட்டில் கூட தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, இந்தியாவில் ஓராண்டில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாஜகவுடன் கூட்டணி சோ்ந்தாலும் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படமாட்டாா்கள். பாதிக்க விட மாட்டோம். தைரியமாக எங்களை ஆதரிக்கலாம். திமுகவினா் தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறாா்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் வேட்பாளா்களுக்கு வாக்களிக்காமல் இருந்து விடாதீா்கள். சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருந்து பாதுகாப்பு கொடுப்போம். பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெற்றால், அவா்கள் தில்லி வரை சென்று நிதிகளைப் பெற்றுத் தருவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com